இவிங்க சொல்லுறத நம்பாதிங்க அண்ணே

Friday, July 26, 2013
மலேஷியாவின் ஈப்போ மாநிலத்தில் இந்திய தம்பதிகள் பத்மநாபன் - இந்திராகாந்தி தம்பதியினர் வசித்து வந்தனர்.
மூன்று குழந்தைகளையுடைய இவர்கள்
கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்தனர். இந்நிலையில், பத்மநாபன் முஸ்லிமாக மாறிவிட்டார். பின்னர் தனது மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை எடுத்துச் சென்று அவர்களையும் முஸ்லிமாக மாற்றிவிட்டுள்ளார்.
இது குறித்து இந்திராகாந்தி, மலேஷிய உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து, தனது பிள்ளைகளை மதம் மாற்றியதைத் திரும்பப் பெற வலியுறுத்தினார். தனது மனுவில் இந்திராகாந்தி, "‘கடந்த 2009 ஆம் ஆண்டு எனது வீட்டுக்குள் பத்மநாதன் அத்துமீறி நுழைந்து, எனது இளைய மகளையும், 3 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களையும் எடுத்துச் சென்றார். பிறகு அவர் முஸ்லிமாக மதம் மாறியதுடன், 3 குழந்தைகளையும் முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதும் எனக்கு தெரிய வந்தது. தாயான என்னுடைய சம்மதம் இல்லாமல் பிள்ளைகளுக்கு நடந்த மதமாற்றத்தை விலக்கம் செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த மலேஷிய நீதிபதி லீ ஸ்வீ செங், தாயின் ஒப்புதல் இன்றி நடந்த இந்த மதமாற்றம் செல்லாது, சட்டவிரோதமானது என்று கூறி அந்த மூன்று குழந்தைகளின் மதமாற்றத்தை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நன்றி:இந்நேரம்
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் அதுவும் இஸ்லாமிய நாடு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரு நாட்டில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதை இந்திய மீடியாக்கள் திட்டமிட்டே புறக்கணிக்கின்றன.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நடக்கும் நண்டு,சிண்டு விசயங்களை கூட கட்டம் கட்டி செய்தி வெளியிடும் பத்திரிகைகள் எங்கே?
இஸ்லாத்திற்கு ஆள் பிடிக்கிறார்கள்,மதம் மாற்றுகிறார்கள் என்றெல்லாம் கதை கட்டிவிடும் சமூக வலைதளகாரர்கள் எங்கே?
நீதிபதி வழங்கிய இத்தீர்ப்புக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய தலைவர்களோ அல்லது வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய தலைவர்களோ நான் அறிந்தவரையில் எதிர்ப்போ,சிறு கண்டனமோ கூட எழுப்பியதாக தெரியவில்லை.
பெரும்பாலான மீடியாக்கள் இஸ்லாத்தின் மீது வெறுப்பை கொட்டுகின்றன,நீதி தவறுகின்றன.எனவே மக்களே இஸ்லாத்திற்கெதிராக பிரமாண்டமாக வைக்கப்படும் பொய் குற்றசாற்றுகளையும், இவிங்க சொல்லுறதையும் நம்பிடாதிங்க...  

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment